Saturday 30 August 2014

தோட்டங்களுக்கு உரம்!வீட்டுக் கழிவுகளிலிருந்து !!!!!!

வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்! கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப் பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன.

மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும். பூங்கா கழிவுகள்: மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும். அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும்.

அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும். ஆக்சிஜன் அவசியம்: கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.

ஈரப்பதம் தேவை: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.இத் தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் கழிவு முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.

செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும்.

இது சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும். வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை இட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம்.அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். இந்த உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது வயல்களில் பயிரிடப்படும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.

முட்டையிலும் முட்டைக்கோஸிலும் ஒரே சத்துக்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு, 'மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியம் பயன்படுத்தப்பட வேண்டிய இருபது வகை காய்கறிகளில் முட்டைகோஸும் ஒன்று' என 1984-ம் ஆண்டு முதல் சிபாரிசு செய்து வருகிறது.

'முட்டைகோஸ் வெறுமனே இலைகளால் ஆன ஒரு காய். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதமான சத்தும் கிடைக்காது' என்கிற கருத்து உலக அளவில் பரவியிருந்தது. ஆனால், பெரும்பாலான நாட்டில் இதை நம்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக முட்டைகோஸை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

இன்று உலகளவில் முட்டைகோஸ் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தியா தான். முட்டைகோஸில் இரும்புச்சத்து வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் டி ஆகியவை அதிகமாக உள்ளதால் குடல் புற்றுநோய்க்கு சிறந்த மருந்து என உலகளவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முட்டையில் இருக்கின்ற சத்துக்களில் பலவும் அப்படியே முட்டை கோஸுக்குள் ளும் இருக்கின்றன.மீனில் உள்ள மூளை வளர்ச்சியைத் தூண்டுகிற ஒமேகா-3 எனும் சத்து முட்டைகோஸிலும் உள்ளன. * பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது.

பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

* முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு

Saturday 23 August 2014

இயற்கை மருந்துகள் பயிரைக் காக்கும்

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.

 விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.
 ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.
 எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.
 எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.
 அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்.
 இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
 நெல் குலை நோய்க்கு வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அசுவணி, இலைப்பேன், வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
 நெல் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
 அனைத்து காய் துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
 வெள்ளை ஈ, இலைப்பேன், மிளகாய்ப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம். பாக்டீரியா, பூஞ்சாணம் நோயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்.
 அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
 கம்பளிப் புழு பாக்டீரீயாவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம். கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
 மிளகாய்ப் பேன், வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
 பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். நிலக்கடலை தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.

 பயறு வகை சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம். தென்னை வாடல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

Sunday 17 August 2014

இயற்கை மருந்துகள் பயிரைக் காக்கும்


இயற்கை மருந்துகள்பயிரைக் காக்கும் .

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.

 விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.
 ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.
 எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.
 எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.
 அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்.
 இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
 நெல் குலை நோய்க்கு வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அசுவணி, இலைப்பேன், வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
 நெல் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
 அனைத்து காய் துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
 வெள்ளை ஈ, இலைப்பேன், மிளகாய்ப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம். பாக்டீரியா, பூஞ்சாணம் நோயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்.
 அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
 கம்பளிப் புழு பாக்டீரீயாவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம். கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
 மிளகாய்ப் பேன், வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
 பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். நிலக்கடலை தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.

 பயறு வகை சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம். தென்னை வாடல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்

Monday 11 August 2014

வெட்டி வேர் விவசாயம் - குறைந்த பராமரிப்பில் நிறைவான லாபம் - விவசாய் அனுபவம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் "வெட்டி வேரை' சாகுபடி செய்வது தமிழகத்தில் அரிதாகவே நடக்கிறது. இதற்கு மணல் கலந்த செம்மண் பொருத்தமானது.
வாரம் ஒரு முறை தண்ணீர் வசதி அவசியம். உரம், பூச்சி மருந்து தேவையில்லை. நாட்டுவகை, தரிணி என்று இருவகை வெட்டி வேரை சாகுபடி செய்யலாம். நாட்டு வகை ஒன்றரை ஆண்டும், தரிணி ஒரு ஆண்டும் சாகுபடி காலம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது குருவாடிப் பட்டி கிராமம். பி.காம்., பட்டதாரியான பாண்டியன், 40, சி.ஏ., படித்து வருவதோடு, ஏழு ஆண்டுகளாக, வெட்டி வேர் விவசாயமும் செய்து வருகிறார். பத்து ஏக்கரில் வெட்டி வேர் சாகுபடி செய்யும் இவர், சி.எம்.சூழல் மூலிகைப் பண்ணை வைத்து வெட்டி வேரை மூலப்பொருளாக வைத்து, அழகுசாதனப் பொருட்கள், பற்பொடி, தண்ணீர் சுத்திகரிப்பு, பற்பொடி, பூஜை நறுமணப்பொருட்கள், மருத்துவத் தைலம், கோடைக்காலத்திற்கு ஜன்னல்களுக்கு வெட்டிவேர் தட்டி, கைவினைப் பொருட்கள் என்று 50க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளார்.

இவர் கூறுகையில்,"ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து, ரூ 25 ஆயிரம் வரை நாற்றுச் செலவாகும். தேவையான நாற்றுக்களை நாங்களே சப்ளை செய்கிறோம். முதல் சாகுபடிக்கு மட்டுமே நாற்றுக்கள் தேவை. பின்னர் அதன் தண்டுகளை நாற்றுகளாக நடலாம்.


முதல் ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.70 ஆயிரம், அடுத்த ஆண்டுகளில் ரூ.30 ஆயிரமும் வரும். ஆண்டு வருமானமாக ஏக்கருக்கு ரூ 1.5 லட்சம் கிடைக்கும்.வேராக எடுத்து விற்கலாம், அல்லது மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியும் விற்கலாம்,' என்றார். ஆலோசனை பெற 96779 85574

Saturday 9 August 2014

பல்வகை பயன்தரும் எலுமிச்சைப் புல் (லெமன் கிராஸ்) சாகுபடி

நறுமணப் பயிராகவும், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள், திரவப் பொருள்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளாகவும் விளங்கும் "லெமன் கிராஸ்' என்னும் எலுமிச்சைப் புல் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

லெமன்கிராஸ்: புல், செடி, கொடிகள் இருந்தால் கொசுக்கள் வரும். ஆனால், எலுமிச்சைப் புல்லோ கொசுவை விரட்டும். இதன் மணம் எலுமிச்சையைப் போன்றே இருப்பதால், இந்தப் புல்லை வளர்த்தால், கொசுக்கள் வராது.

இந்தப் புல்லிலிருந்து எடுக்கப்படும் லெமன் கிராஸ் எண்ணெய், துணி துவைக்கும் பவுடர், பாத்திரம் துலக்கும் பவுடர், புளோர் கிளீனர், பினாயில் போன்றவற்றுடன் சேர்க்கப்படுகிறது. லெமன் டீ தயாரிப்பில் எலுமிச்சைச் சாறுடன் நறுமணத்துக்காக லெமன் கிராஸ் ஆயிலும் சில இடங்களில் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சைப் புல் கேரளத்தில்தான் அதிகமாக விளைவிக்கப்படுவதால் லெமன் கிராஸ் ஆயிலை "கொச்சி வாசனை எண்ணெய்' எனவும் அழைப்பர்.

லெமன் கிராஸ் ஆயில் கொடைக்கானலில் அதிகமாக விற்கப்படுகிறது. இது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். கெமிக்கல் கடைகளில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட லெமன்கிராஸ் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்தப் புல் அதிகம் பயிரிடப்படுகிறது.

ரகங்கள்: ஒடி 19, 408, ஆர்ஆர்எல் - 39, பிரகத், பிரமான, சிபிகே - 25, கிருஷ்ணா மற்றும் காவேரி.

மண், தட்பவெப்பநிலை: வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு: ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ ஹெக்டேர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜூன் - ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம்.

நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழுது, ஒரு ஹெக்டேருக்கு 20-25 டன் மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்த வேண்டும். தேவையற்ற அளவில் பாத்திகள் பார்கள் அமைத்து நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு ஹெக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து உரத்தில் முதல் பாதியை நடவின்போதும் மீதி உரத்தை நடவு செய்த ஒரு மாதம் கழித்தும் இடவேண்டும். இரண்டாம் ஆண்டில் அறுவடையின் பின்பும் மற்றும் ஒரு மாதம் கழித்தும் தழைச்சத்து உரம் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்: நடவு செய்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். எலுமிச்சைப் புல்லுக்கு 7 முதல் 15 நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு: இப்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் காணப்படுவதில்லை. எனினும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டர்ன் 25 ஈசி (அ) டைமெத்தோயேட் 30 ஈசி 1 மில்லியனை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைத் தின்னும் புழுக்களைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 ஈசி (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 ஈசி 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை: நடவு செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது அறுவடையும் செய்ய வேண்டும். அறுவடையின்போது புல், புதர்களை தரைமட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணெய் எடுக்க தண்ணீர் அல்லது ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்க வேண்டும். எண்ணெய் கிடைக்கும் அளவு 0.2 - 0.3 சதவீதம்.
மகசூல்: ஹெக்டேருக்கு 20 முதல் 30 டன் வரை புல் கிடைக்கும். எண்ணெய் ஹெக்டேருக்கு முதலாமாண்டு 25 கிலோ, இரண்டாமாண்டு 85 முதல் 100 கிலோ கிடைக்கும்.


இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றி எலுமிச்சைப் புல் சாகுபடி செய்து நல்ல மகசூலும் கூடுதல் வருமானமும் பெறலாம். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை நேரில் அணுகலாம்.

Wednesday 6 August 2014

வருவாய் தரும் கோழி வளர்ப்பு!

கால்நடை வளர்ப்பு தொழிலில் தமிழகத்தில் பொதுவாக அனைவரின் பங்களிப்பும் இருப்பது கோழி வளர்ப்பில்தான். பசு, ஆடு, முயல் வளர்ப்பு போன்றவற்றைக் காட்டிலும் கோழி வளர்ப்பு மிக எளிது. இறைச்சிக்கான பிராய்லர் கோழி வளர்ப்பு பெரிய பண்ணைகளுடன் முடிந்துவிடுகிறது. ஆனால், நாட்டுக்கோழி வளர்ப்பு வீடுதோறும் இருந்து வருகிறது.
எனினும், நாட்டுக்கோழியையும் சிறிய பண்ணை முறையில் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம். தரமான நாட்டுக்கோழி முட்டைகளைத் தேர்ந்தெடுத்து, கருவிகள் மூலம் நாமே பொரிக்கச் செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின், அடை காத்த முட்டைகளைப் பொரிக்கச் செய்ய கேட்சர் மெஷின் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். புதிதாக தொழில் தொடங்குவோர் குறைந்த முதலீட்டில் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.
கரையான்கள் கொடுக்கலாம்: முதன்முதலாக கோழி வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் தோட்டங்களில் 20 முதல் 50 கோழிக்குஞ்சுகளை 10 கூடுகளைப் பயன்படுத்தி வளர்த்துப் பார்க்கலாம். நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பராமரிப்பு மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக வேறு பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
முதல் 48 நாள்களுக்கு புரோட்டின் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு தீவனத்துடன் கீரை, கரையான்களைக் கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை நீரில் கலந்துகொடுக்கலாம்.
கேரட், பெரிய வெங்காயம் போன்றவற்றைப் பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாள்களுக்கு மேல் கடைசிவரை ஏதாவது ஒரு கீரை வகையைப் பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசி அதிகரிக்கும்.
கோழிக் கூண்டுகளிலும் பண்ணைகளில் பயன்படுத்துவதைப்போல தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகாமலிருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதைத் தவிர்க்க, 20 முதல் 30 நாள்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும்.
மொத்தமாக 80 முதல் 100 நாள்களில் சேவல், கோழிகளை விற்பனைக்கு அனுப்ப முடியும். இறைச்சி விற்பனையாளர்கள், ஹோட்டல்கள் போன்றவை நாட்டுக்கோழிகளை நேரடியாக வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இதன் மூலம் அதிக வருவாய் பெறலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பு, அதுகுறித்த கூடுதல் விவரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீபுரம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு நேரில் சென்று பல்கலைக்கழகட்க் பேராசிரியர்களைச் சந்தித்து விளக்கம் பெறலாம்.

Monday 4 August 2014

கால்நடைகளுக்கு ஊறுகாய் புல் தயாரிப்பு

  • பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில்( மழைக் காலங்கள் ) தேவைக்கு போக மீதம் இருப்பவற்றை பதப்படுத்தி ,அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த முறையாகும் .
  • முற்றிபோன மற்றும் தடிமான தண்டுடைய தீவனப்பயிர்களை இதன் மூலம் பதப்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தலாம்.மேலும் இவைகள் வீணாகாமல் கால்நடைகள் உட்கொள்ளும்.
  • இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.எனவே பசுந்தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.
  • தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும்.
  • ஊறுகாய் புல் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.
செய்முறை
 
 மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை,  கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.
  • ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
  • அளவு - 1 மீ x 1மீ  x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.
  • குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.
  • தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).
  • பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும். அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.
  • ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.
  • பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.
  • ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.
  • குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.
  • மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்
  • நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.
  • இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.
  • 2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.
  • ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்.