Saturday 30 August 2014

முட்டையிலும் முட்டைக்கோஸிலும் ஒரே சத்துக்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு, 'மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியம் பயன்படுத்தப்பட வேண்டிய இருபது வகை காய்கறிகளில் முட்டைகோஸும் ஒன்று' என 1984-ம் ஆண்டு முதல் சிபாரிசு செய்து வருகிறது.

'முட்டைகோஸ் வெறுமனே இலைகளால் ஆன ஒரு காய். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதமான சத்தும் கிடைக்காது' என்கிற கருத்து உலக அளவில் பரவியிருந்தது. ஆனால், பெரும்பாலான நாட்டில் இதை நம்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக முட்டைகோஸை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

இன்று உலகளவில் முட்டைகோஸ் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தியா தான். முட்டைகோஸில் இரும்புச்சத்து வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் டி ஆகியவை அதிகமாக உள்ளதால் குடல் புற்றுநோய்க்கு சிறந்த மருந்து என உலகளவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முட்டையில் இருக்கின்ற சத்துக்களில் பலவும் அப்படியே முட்டை கோஸுக்குள் ளும் இருக்கின்றன.மீனில் உள்ள மூளை வளர்ச்சியைத் தூண்டுகிற ஒமேகா-3 எனும் சத்து முட்டைகோஸிலும் உள்ளன. * பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது.

பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

* முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு

No comments:

Post a Comment