Saturday 26 July 2014

வாழை தரும் உபதொழில்கள்



வாழை விவசாயத்தில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் எக்டேரில் ஒரு கோடியே 70 லட்சம் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் எக் டேரில் வாழை விவசாயம் நடக்கிறது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில்தான் அதிக அளவில் வாழை விவசாயம் நடக்கிறது. அதனால்தான் நாடு முழுவதுக்குமான வாழை ஆராய்ச்சி நிலையத்தை திருச்சி பெற்றுள்ளது.


இவ்வளவு இருந்தும் வாழை விவசாயிகள் உபபொருட்களை தயாரிக்க கற்றுக்கொள்ளத் தவறிவிட்டனர். இந்தக்குறையை தவிர்க்க வாழை ஆராய்ச்சி மையத்தில் 20 விதமான வாழை உபபொருட்களை தயாரிக்கலாம் என கண்டறிந்து அறிவித்துள்ளனர்.


மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்துகூட வாழை உபபொருள் தயாரிப்பு குறித்து கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர். ஜப்பானில் நார்ச்சத்துள்ள வாழை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. வாழை நாரில் இருந்து ஆடை தயாரித்து பயன்படுத்துகின்றனர்.


ஜப்பான் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு நார்ச்சத்துடன் கூடிய வாழை ரகத்தை இங்கு பயிரிடுவது, வாழை நார் ஆடை தயாரிப்பது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுவதிலும் திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம் இங்கு ஈடுபட்டுள்ளது.

உயர்ரக கலப்பின புதிய வாழையை உருவாக்குவதில் வாழை ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டுள்ளது. இரண்டொரு மாதங்களில் இந்த உயர்ரக நார்ச்சத்துடன் கூடிய வாழை அறிமுகம் செய்யப்படும். வாழையில் இருந்து விதவிதமான உணவுப்பொருட்களுடன் பாய், காகிதம் போன்ற பிற பொருட்களையும் தயாரிக்கலாம்.

இப்படி வாழையில் இருந்துபிற பொருட்களை தயாரிக்க நமது விவசாயிகளும் தொழில் முனைவோர்களும் முன்வரவேண்டும். நபார்டு நிறுவனம் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உரிய பயிற்சியையும் வழங்குகிறது.

தேவைப்பட்டால் கடனுதவியையும் பெற்றுத்தருகிறது. இதற்காக 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மூன்று திட்டத்தை நபார்டு நிறு வனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பாங்க், திருவாங்கூர் பாங்க், மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய 5 வங்கிகள் கடனுதவி தருவதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் விபரங்களுக்கு:

தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம்,

இந்திய அரசு, தோகைமலை ரோடு,

தாயனூர் அஞ்சல், திருச்சி.

போன்: 261 8104, 261 8106.

மற்றும்

நபார்டு வங்கி,

நெ.15, முதல் மாடி,

சாஸ்திரி ரோடு,

தென்னூர், திருச்சி-17.

No comments:

Post a Comment